டோக்கியோ விரிகுடாவில் இருந்து ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம்
ஜப்பானின் டோக்கியோ விரிகுடாவில் நிறுவப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டது.
டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏழு மாதங்களுக்கு முன்பு 50 அடி உயரம் மற்றும் 107 அடி அகலத்தில் டோக்கியோ விரிகுடாவில் நிறுவப்பட்ட ஒலிம்பிக் நினைவுச் சின்னம், பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் மீண்டும் நிறுவப்படும் என்று டோக்கியோ பெருநகர திட்ட இயக்குநர் அட்சுஷி யனாஷிமிஜு தெரிவித்துள்ளார்.
The Olympic rings monument installed in Tokyo Bay for the 2020 Summer Games was temporarily removed for maintenance https://t.co/OZU5eRR9FD pic.twitter.com/4OJqP1ehV7
— Reuters (@Reuters) August 6, 2020
Comments