அமெரிக்காவில் ஐசாயாஸ் புயலால் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல்

0 1708

அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையோரம் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஐசாயாஸ் புயலால் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கரோலினாவில் கடந்த 3 ஆம் தேதி ஐசாயாஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வேகமாக வீசிய காற்று மற்றும் கனமழையால் நியூயார்க் முதல் வட கரோலினா வரையிலான 28 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள் மின்சார இணைப்பை இழந்தன.

வடக்கு கரோலினாவில் புயலால் பூங்கா ஒன்று கடுமையாக சேதமடைந்த நிலையில் அதில் சிக்கிய 2 பேர் உயிரிழந்தனர். மெக்கானிக்ஸ்வில் மற்றும் நியூயார்க்கின் குயின்ஸ் நகரங்களில் கார்கள் மீது ராட்சத மரம் விழுந்ததில் மேலும் 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments