வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடரும்-ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான 6 உறுப்பினர் நிதி கொள்கை குழு இதை அறிவித்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதமான 3.3 சதவிகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை குறைத்து, வளர்ச்சியை எட்டுவதற்கான காலம் வரை சாதகமான பொருளாதார கொள்கைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். அதே நேரம் பணவீக்கம் திட்டமிடப்பட்ட இலக்கிற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்தார்.
எல்லா அம்சங்களையும் வைத்து பார்க்கும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டின் முதல் பாதியில் சரிவை சந்திக்கும் என்ற அவர், ஒட்டுமொத்தமாக 2020-21 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியும் எதிர்மறையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
RBI keeps repo rate unchanged at 4 pc, GDP growth seen negative in FY21
— ANI Digital (@ani_digital) August 6, 2020
Read @ANI Story | https://t.co/xUtZjN1xB9 pic.twitter.com/Rd0RF4GbhR
Comments