ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுவில் ஒரு பங்கு சக்தி; சுங்க அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தால் சிதைந்த பெய்ரூட்!

0 72405

லெபனானில் நேற்று முன்தினம் இரவு அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு வெடித்ததில் 138 பேர் பலியாகியுள்ளனர். 4000-  க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியது குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013- ம் ஆண்டு ஜார்ஜியாவிலிருந்து மொசாம்பிக் நாட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு கப்பல் பெய்ரூட்டுக்கு வந்துள்ளது. கப்பலில் அமோனியம் நைட்ரேட் இருந்துள்ளது. தனியார் நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பலைப் பறிமுதல் செய்த அதிகரிகள் அதிலிருந்த 2750 கிலோ எடை கொண்ட அமோனியம் நைட்ரேட்டை துறைமுகப் பகுதியிலுள்ள 12- ம் எண் கிட்டங்கியில் சேமித்து வைத்துள்ளனர்.

image

அமோனியம் நைட்ரேட்டை அகற்றுவது குறித்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் கடந்த 2014- ம் ஆண்டு முதல் லெபனான் நீதித்துறைக்கு 6 முறை கடிதம் எழுதியுள்ளனர். அதில், அமோனியம் நைட்ரேட் அடங்கிய மூட்டைகளை அகற்ற உதவும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், நீதித்துறையிலிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டதால் அறைக்குள் அதிக அளவு வெப்பம் உருவாகி அமோனிய நைட்ரேட் மூட்டைகள் வெடித்துச் சிதறியுள்ளன.

அறை வெப்பநிலையில் உள்ள சுத்தமான அமோனியம் நைட்ரேட் ஆபத்தானது அல்ல. ஆனால், 32.2 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்ப நிலை நிலவினால் ஆபத்தானதாக மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்ததோடு துறைமுகத்தில் மற்றோரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்து கிட்டங்கியில் எண் 12- ல் 170 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உருவாகியிருந்தாக சொல்லப்படுகிறது. இந்த அதீத வெப்பமே பெய்ரூட் நகரம் சிதைந்து போக முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. வெடி விபத்தால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட துறைமுக அதிகாரிகளை வீட்டுச்சிறையில் வைக்க லெபனான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

image

அமோனியம் நைட்ரேட் என்பது ஒரு வெள்ளைப் படிக உப்பு ஆகும். உரம் தயாரிக்கவும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. குவாரிகள், சுரங்கங்களில் இணை பொருள்களுடன் சேர்த்து வெடிபொருளாகவும் பயன்படுகிறது.  வெடிகுண்டுகளை தயாரிக்கவும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது. ஐரிஸ் விடுதலை ராணுவம் அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரித்ததாகவும் தகவல் உள்ளது.

கடந்த 2002- ம் ஆண்டு தாய்லாந்தின் பாலி தீவில் இரவு விடுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், 200 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெய்ரூட் வெடி விபத்தை  ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டு சக்தியில் பத்தில் ஒரு பங்கு இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments