பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டு தாக்குதல், 39 பேர் காயம்
பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 39 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு, ஜமாத் -இ- இஸ்லாமி எனும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பேரணியில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கையெறி குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில், பெரும்பாலானோருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட சிந்துதேஷ் புரட்சிகர ராணுவம் (Sindhudesh Revolutionary Army) பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என, ஜமாத் -இ- இஸ்லாமி அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
Comments