காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வியை தழுவியது
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வியை தழுவி உள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் மூடிய அறையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. ஆனால், நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு மற்றும் ரஷியா உட்பட பெரும்பாலான நாடுகள், இந்தியா வலியுறுத்தியதின் படி இந்த பிரச்சனையை இருநாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளது.
Another attempt by Pakistan fails!
— PR UN Tirumurti (@ambtstirumurti) August 5, 2020
In today’s meeting of UN Security Council which was closed, informal, not recorded and without any outcome, almost all countries underlined that J&K was bilateral issue & did not deserve time and attention of Council.
மேலும், இந்த விவகாரத்தில் கவுன்சில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டதாகவும், ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Comments