உருக்குலைந்த லெபனான் தலைநகர்..!

0 15587

லெபனான் நாட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் என்ற வெடிமருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் மொத்த நகரமும் அதிர்ந்து போகும் வகையில் 2வது பெருவெடிப்பு ஏற்பட்டது.

பெரு வெடிப்பின் போது எழுந்த காளான் போன்ற புகைமண்டலம் விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து நின்றது. அதன் தொடர்ச்சியாக வெற்றிடத்தில் பரவிய வேகக்காற்று காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நகரம் முழுவதும் ஏற்பட்ட அதிர்வலையால் கண்ணாடி ஜனனல்கள் தூள்தூளாக நொறுங்கின.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களும், துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் பெட்டிகளும் கண்காணாத இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன.
திடீரென்று நிகழ்ந்துவிட்ட பெரு வெடிப்பு காரணமாக நிகழ்விடத்திலேயே 80 உடல் சிதறி உயிரிழந்தனர். வெடிமருந்த வெடித்த சத்தம் 100 கிலோ மீட்டருக்கும் அப்பால் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி 4000 பேர் படுகாயமடைந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்த சில மணி நேரங்களில் அதிகரித்தது. நேற்றிரவு கணக்கீட்டின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஆகவும் உயர்ந்தது. நகரமெங்கும் மரண ஓலமும் தரைமட்டமான கட்டடங்களும் ஆகவே காட்சியளித்தன. புனித மாரோன் தேவாலயத்தில் நடந்துகொண்டிருந்த திருப்பலியின் போது மொத்த தேவாலயமும் வெடித்துச் சிதறியதில் பாதிரியார் உட்பட பலரும் படுகாயமடைந்தனர்.

வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் அருகில் மருந்து வெடித்ததும், அதன் தாக்கத்தால் பகுதியளவு கடல் நீர் ஆவியானதாக பெய்ரூட் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து ரஷ்ய தொழிலதிபர் இகோர் கிரிசஸ்கின் என்பவருக்குச் சொந்தமானது என்றும், அதனை பத்திரமாக வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், துறைமுக அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உயர்மட்ட விசாரணைக்கு லெபனான் அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments