நடிகை ரியாவைக் கைது செய்யத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
மேலும் பீகாரில் தன்மீதுள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா தாக்கல் செய்த மனுவை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், ரியாவைக் கைது செய்யத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் பாட்னாவில் பேசிய பீகார் மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் குப்தேஸ்வர் பாண்டே, ரியா சக்கரவர்த்தி தலைமறைவாகிவிட்டதாகத் தெரிவித்தார். மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட பாட்னா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வினய் திவாரியை விடுவித்து, பீகாருக்குத் திரும்பிச் செல்ல அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Comments