'கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன்' - வீடியோ வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, ''கடந்த இரு நாள்களாக உடல் நிலையில் ஒரு விதமான சோர்வு தெரிந்தது. காய்ச்சலும் சளியும் இருந்தது. இதை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாக மருந்துவமனைக்குச் சென்றேன். அங்கே, எனக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். மைல்ட் என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லியுள்ளனர்.
எனினும், நான் நுங்கம்பாக்கத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டுள்ளேன். சரியான தருணத்தில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இன்னும் இரு தினங்களில் குணமடைந்து விடுவேன். எனக்குப் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. நான் நல்லபடியாக இருக்கிறேன். எனவே, யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் . நான் இங்கு ஓய்வு எடுக்கவே வந்துள்ளேன். என் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 74 வயதான எஸ்.பி பாலசுப்ரமணியம் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Singer And Actor And Producer #SPBalasubrahmanyam has been admitted to a hospital with mild symptoms of corona virus#SPBalasubramaniam #CoronaVirusUpdates pic.twitter.com/vmvCJWzYAI
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 5, 2020
Comments