2019 சிவில் சர்வீஸ் தேர்வில் ஹரியானா விவசாயியின் மகன் நாட்டிலேயே முதலிடம்
2019ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன், நாட்டிலேயே முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளார்.
யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 829 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் அத்தேர்வில் சோனிபட்டை (Sonipat) சேர்ந்த விவசாயியின் மகன் பிரதீப் சிங் (Pradeep Singh) முதலாவதாக வந்துள்ளார்.
இது தமது 4ஆவது முயற்சி என கூறியுள்ள அவர், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார். டெல்லியை சேர்ந்த ஜதீன் கிசோர் என்பவர் 2ஆவதாகவும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரதீபா வர்மா 3ஆவதாகவும் (Jatin Kishore (Delhi) and Pratibha Verma (Uttar Pradesh) வந்துள்ளனர்.
Comments