''பார்வை இருண்டு விட்டாலும், தாயும் தந்தையும்தான் என் கண்கள்!' - சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவி பூர்ணசுந்தரி

0 10214

ந்திய ஆட்சிப் பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 2019 - ம் ஆண்டு எழுதிய தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடைதேவி தம்பதியின் மகள் பூர்ணசுந்தரி என்பவரும் ஒருவர். இந்த பூர்ணசுந்தரி பார்வையற்ற மாற்றுத் திறனாளி, ஆனாலும் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

பூர்ண சுந்தரிக்கு 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை முழுமையாக இழந்தார். வாழ்க்கை இருண்டு விட்டது என்று நினைக்கவில்லை. இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு கல்வியைத் தொடர்ந்தார். முதல் வகுப்பிலிருந்தே பூர்ண சுந்தரிதான் வகுப்பில் முதல் ரேங்க். 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண், 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண் பெற்ற நிலையில் மதுரை பாத்திமா கல்லூரியில் ஆங்கில இளங்கலை இலக்கியம் தேர்வு செய்து படித்தார். குடும்பத்தின் வறுமையை எண்ணி படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த பூர்ண சுந்தரிக்கு தாயும் தந்தையும்தான் இரு கண்களாக இருந்து உதவினர். தாய் அல்லது தந்தை பாடத்தை வாசிக்க, பாடங்களை பூர்ணசுந்தரி புரிந்து கொள்வார். கல்லூரியில் சக மாணவிகள் உதவினர்.  பூர்ண சுந்தரி சொல்லச் சொல்ல ஆசிரியர்கள்தான் தேர்வு  எழுதுவார்கள்.

பூர்ணசுந்தரிக்கு கலெக்டர் ஆவதுதான் லட்சியம். அதனால்,  2016 - ஆம் ஆண்டு முதல் டி.என்,பி,எஸ்சி குரூப் தேர்வு, வங்கிப் போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 - க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை மனம் தளராமல் எழுதி வந்தார். கடந்த 2018- ஆம் ஆண்டு வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்தார்.  ஆனால், கிளர்க் பணியோடு பூர்ண சுந்தரி மன நிறைவடைந்து விடவில்லை. கடந்த 2019 -ஆம் ஆண்டு நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வு எழுதி அதில் 296 வது இடம் பெற்று பாஸாகியுள்ளார். 

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூர்ணசுந்தரி கூறுகையில், ''பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தேன். கண்கள் இருண்டு விட்டாலும் தாயும் தந்தையும்தான் எனக்கு இரு கண்களாக இருந்து பாடங்களைப் படித்து காண்பிப்பார்கள். அதைக் கேட்டு கற்றுகொண்டேன். போட்டித் தேர்விற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கிப் பயின்ற போது சக மாணவர்கள் உற்சாகம் கொடுத்தனர். நிதியுதவி கூட அளித்தனர். என் தாயார் எனக்கு ஆசிரியராகவும் இருந்தார். கிடைத்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே எனக்கு வராத அளவுக்கு என்னை  பார்த்துகொண்டார் எனது தாயார். என்னை போன்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்'' என்கிறார்.

தமிழகத்திலிருந்து 60 பேர் யு.பி.எஸ்.சி தேர்வு எழுதினர். பூர்ண தேவி போல மற்றோரு மாற்றுத்திறனாளி மாணவர் பாலநாகேந்திரனும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த பாலநாகேந்திரன் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வந்தார். தன் விடா முயற்சியால் தற்போது 927-வது ரேங்க் பெற்று பாஸாகியுள்ளார்.

பூர்ண சுந்தரியும் பாலநாகேந்திரனும் மாற்றுத்திறனாளிகளுக்க  மட்டுமேல்ல ஒவ்வொருவருக்குமே முன்னுதாரணம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments