மிக்-23 ரக விமானத்தை ஆன்லைன் மூலம் விற்பதாக வந்த செய்தி தவறானது-அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

0 1664
இந்திய விமானப்படையால் தங்களுக்கு பரிசளிக்கப்பட்ட மிக்-23 ரக விமானத்தை ஆன்லைன் மூலம் விற்பதாக வந்த செய்தி தவறானது என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையால் தங்களுக்கு பரிசளிக்கப்பட்ட மிக்-23 ரக விமானத்தை ஆன்லைன் மூலம் விற்பதாக வந்த செய்தி தவறானது என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விற்பனை மற்றும் கொள்முதல் தளமான OLX ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மிக் 23 ரக விமானத்தை 9 கோடியே 99 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்க இருப்பதாக விமானத்தின் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர், இதுபோன்ற குறும்புத்தனத்தை செய்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தனர். கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட இந்த விமானம் 2009ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments