மும்பையில் 4 மணி நேரத்தில் 198 மிமீ விடிய விடிய கொட்டிய கனமழை
மும்பையில் விடிய விடிய கொட்டிய கனமழை காலையிலும் தொடர்ந்ததால், நகரின் பல பாகங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலைகளில் ஆறாக ஓடும் நீரால் வாகனங்கள் மூழ்கி உள்ளன. பல இடங்களில் குடியிருப்புகளிலும், வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
நான்கே மணி நேரத்தில் மும்பையில் 198 மில்லிமீட்டர் மழை பெய்து நகரை மூழ்கடித்துள்ளது. கடந்த 2005 க்குப் பிறகு மும்பையில் பெய்த அதிகபட்ச மழை இது என்று மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மழையால் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதை தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. அவசர சேவைகளை தவிர அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் மிக மிக கனமழை பெய்யும் என மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தானே, புனே, ராய்காட், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் மழை அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Comments