தெரு நாய்க்கு ‘சேல்ஸ் டாக்’ வேலை ; கனிவு காட்டிய ஹூண்டாய்! - பிரேசிலில் சுவாரஸ்ய சம்பவம்
பிரேசிலில் உள்ள ஹூண்டாய் கார் ஷோ ரூம் ஒன்று டக்சன் பிரைம் என்ற தெரு நாயைத் தத்தெடுத்து, சேல்ஸ்டாக் வேலை கொடுத்து அழகு பார்த்துள்ளது. சேல்ஸ்டாக் டேக்குடன், நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுக்கும் டக்சன் பிரைம் குறித்த செய்தி சமூக வலைத்தளத்தில் செம வைராலாகியுள்ளது.
பிரேசிலில் நாட்டில் Serra என்ற நகரில் ஹூண்டாய் ஷோ ரூம் அருகே தெருநாய் ஒன்று வசித்து வந்தது. இந்த நாய் முதலில் ஷோ ரூம் ஊழியர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியது. அதன் பிறகு, ஷோ ரூமுக்குள்ளும் நுழைந்து வருவோர் போவோரிடம் அன்பாகப் பழகியது. அதன் அன்பான நடவடிக்கைகளைப் பார்த்த ஷோ ரூம் நிர்வாகம், இந்த நாயை கௌரவ ஊழியராக நியமித்துள்ளது.
ஷோ ரூமின் ஊழியராக நியமிக்கப்பட்டதையடுத்த அடையாள அட்டையையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஷோ ரூமுக்கு வரும் வாடிக்கையாளர்களை டக்சன் பிரைம் தான் வரவேற்கிறது. வாடிக்கையாளர்களை வரவேற்பது, சேல்ஸ் மீட்டிங்கில் பங்கு கொள்ளும் டக்சன் பிரைமின் புகைப்படங்களைப் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது இந்த நாய்க்கென்று தனி இன்ஸ்டாகிராம் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இதை 28,000 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். ஹூண்டாய் ஷோரும் நிர்வாகிகளுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
Comments