தற்கொலை எண்ணத்தை குறைக்க ஸ்ப்ராவாடோ நாசி தெளிப்பான் பயன்படுத்த ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்திற்கு ஒப்புதல்
தற்கொலை எண்ணங்களை குறைப்பதற்கு ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்தின் நாசி தெளிப்பானை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மன உளைச்சலுக்கு உள்ளானவர்களின் தற்கொலை எண்ணங்களை குறைக்க ஆண்டி டிப்ரசன் மருந்து பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஜான்சன் அன் ஜான்சன் உருவாக்கி உள்ள ஸ்ப்ராவாடோ நாசி தெளிப்பான், மற்ற ஆண்டி டிப்ரசன் மருந்துகளை விட துரிதமாக செயல்படுவதாக அந்நிறுவனத்தின் நரம்பியல் பிரிவு துணைத் தலைவர் மைக்கேல் கிராமர் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்த 6 ஆயிரம் பேர், ஸ்ப்ராவாடோவை கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தியதாகவும் கெட்டமைன் மயக்க மருந்துடன் தொடர்புடைய ஸ்ப்ராவாடோ, மூளையில் உள்ள குளுட்டமேட் அமைப்பில் வேகமாக செயல்பட்டு அவர்களின் தற்கொலை எண்ணத்தை விரைவாக குறைத்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மைக்கேல் விளக்கி உள்ளார்.
Comments