காப்புரிமை மீறல் வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ 10,800 கோடி இழப்பீடு கேட்டு சீன நிறுவனம் வழக்கு
செயற்கை நுண்ணறிவு தொடர்பான தங்களது காப்புரிமையை மீறி விட்டதாக, ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனமான ஷியோவோ-ஐ ((Xiao-i)) இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.
சுமார் 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. உற்பத்தி, பயன்பாடு, விற்பனை மற்றும் இறக்குமதி தொடர்பாக தங்களுக்கு இருக்கும் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் போன்களில் பயன்படும் குரல் அங்கீகார தொழில்நுட்பமான சிரி க்கு கடந்த 2009ல் தங்களுக்கு காப்புரிமை கிடைத்துள்ளதாவும் ஷியோவோ-ஐ தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக கடந்த 2012 ல் முதன்முதலாக ஷியோவோ-ஐ இழப்பீட்டு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Comments