தங்க கடத்தல் வழக்கு யுஏஇ சென்று விசாரணை நடத்த என்ஐஏ முடிவு
கேரள தங்க கடத்தல் வழக்கை விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல உள்ளனர். அமீரக துணை தூதரக லக்கேஜுகளில் தங்கம் கடத்தப்பட்ட முறை, அதில் இருந்து கிடைத்த பணம் வாயிலாக நடந்த ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று அவர்கள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கேரள தங்க கடத்தல் கும்பலால் கடந்த ஆண்டு சென்னை விமான நிலையம் வழியாக 400 கிலோ தங்கம் கடத்தப்பட்டது என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடத்தப்பட்ட தங்கம் பல வழிகளில் கேரளா, தமிழகம் மற்றும் நாடு முழுதும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமீசுக்கு கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய நகரங்களிலும், தமிழகத்திலும் சில குழுக்களுடன் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments