கொரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
கொரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்க தடைவிதிக்க அரசாணை பிறப்பிக்க கோரிய வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றதால், அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என்று வீடு, நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதேபோல தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் வாடகைதாரரோ வீட்டு உரிமையாளரோ யாரும் வழக்குத் தொடரவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கை மனுதாரருக்கு அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வழக்கை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கொரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி | #HouseRent | #HighCourt https://t.co/Ee0JLwdM5w
— Polimer News (@polimernews) August 4, 2020
Comments