பயங்கரவாதத்தின் முக்கிய பகுதியாக பாகிஸ்தான் திகழ்கிறது : இந்திய நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி
பயங்கரவாதத்தின் முக்கிய மைய பகுதியாக பாகிஸ்தான் திகழ்வதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் சர்வதேச பயங்கரவாதிகளும், ஜமாத் உத் தவா, லஷ்கரே தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளும் செயல்படுவதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானே தெரிவித்து இருப்பதாக கூறியுள்ள திருமூர்த்தி, இந்தியாவுடனான இருதரப்பு விவகாரங்களை சர்வதேச விவகாரமாக்க அந்நாடு முயல்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இதுதொடர்பாக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதாகவும் திருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
#WATCH It's a well-known fact that Pak is nerve centre of terrorism... Pak PM himself is on record saying there are around 40,000 terrorists present in Pak and they have attacked neighbouring countries: TS Tirumurti, Permanent Rep. of India to UN pic.twitter.com/b3PzSLScgq
— ANI (@ANI) August 4, 2020
Comments