டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது
டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது என சீன அரசு ஊடகமான சீனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் விற்பனை செய்யவேண்டும் என கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இல்லையெனில் டிக்டாக்குக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன அரசு நாளிதழான சீனா டெய்லியில், டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுய முக்கியத்துவ கொள்கையின் விளைவாகவே சீன நிறுவனங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் சொல்ல சீனாவிடம் ஏராளமான வழிகள் இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments