வெட்டுக்கிளிகள் பிரச்னையை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம்
வெட்டுக்கிளிகள் பிரச்சனையை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், காரீப் பருவத்தில் வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானின் 12 மாவட்டங்களில் 1,000 கோடி ரூபாய்க்கு பயிர்களுக்கு அழிவு நேரிட்டதாகவும், இதேபோல் ரபி பருவ பயிர்களுக்கும் ஆபத்து உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரச்னையின் தீவிரத்தை கருதி, அதில் தலையிட்டு தேசிய பேரிடராக பிரதமர் அறிவிக்க வேண்டும், பிற நாடுகளுடன் சேர்ந்து வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Rajasthan Chief Minister Ashok Gehlot wrote to Prime Minister Narendra Modi yesterday regarding locust menace. "Declaring this a national disaster will strengthen the capability of states to fight this menace", the letter reads. pic.twitter.com/nSLS6Q5ZX6
— ANI (@ANI) August 3, 2020
Comments