தடயவியல் துறை ஆடிட்டர் மூலம் சுஷாந்தின் வங்கிக் கணக்குகள் ஆய்வு

0 1948
தடயவியல் துறை ஆடிட்டர் மூலம் சுஷாந்தின் வங்கிக் கணக்குகளை ஆராய இருப்பதாக, மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

தடயவியல் துறை ஆடிட்டர் மூலம் சுஷாந்தின் வங்கிக் கணக்குகளை ஆராய இருப்பதாக, மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

சுஷாந்தின் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஆராய தடயவியல் துறை ஆடிட்டர் ஒருவரை நியமித்திருப்பதாகவும், இதுவரை காதலி ரியா அல்லது அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கு மோசடியாக பணப்பரிமாற்றம் நடந்ததாக குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு வரை சுஷாந்தின் வங்கிக் கணக்கில் 18 கோடி ரூபாய் வரை இருந்தாலும், அவர் பல்வேறு செலவுகளை செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது சில பிக்சட் டெபாசிட்டுகளையும் சேர்த்து 4.5 கோடி மட்டுமே இருப்பதாகவும், அவரது ஆடிட்டர் அளித்த தகவலின் படி முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் 2.5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கட்டியதாகவும், அசாம் மற்றும் கேரள வெள்ள பாதிப்புக்கு 3 கோடி நிதியுதவி அளித்ததாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments