50 அடி உயர அலையை எதிர்கொண்டு உலக அலையேற்ற லீக் போட்டியில் பட்டம் வென்ற அமெரிக்க வீரர்
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் நடந்த உலக அலையேற்ற லீக் போட்டியில் 50 அடி உயர அலையை எதிர்கொண்டு அமெரிக்க வீரர் பட்டம் வென்றார்.
மவுயி என்ற இடத்தில் பசுபிக் பெருங்கடலில் நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் அமெரிக்க வீரர் எலி ஓல்சனும் பெண்கள் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பைஜ் ஆல்ம்ஸூம் "மிகப்பெரிய துடுப்பு" என்ற பட்டம் வென்றனர்.
ராட்சத அலைக்குள் நுழைந்து சாகசம் புரிந்த இருவரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள ஆண்டின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.
Comments