மத்திய, வடஇந்திய பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்

0 1694
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மத்திய மற்றும் வடஇந்திய பகுதிகளில் அடுத்த 3, 4 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை உள்ளடக்கி கொங்கன் மற்றும் கோவா பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலாக கன மற்றும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மும்பை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் அதிகன மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகத்திலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா, மேற்குவங்கத்தின் கங்கைச் சமவெளி பகுதிகள் மற்றும் சத்தீஸ்கரிலும் இன்றும் நாளையும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.

கிழக்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கரில் அடுத்த 12 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments