பூவுலகில் வாழ்ந்த டைனோசர்கள் உயிரிழந்தது குறித்து அரிய தகவல் வெளியீடு
உலகில் 76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் வகை இனங்கள் புற்றுநோய் தாக்கி இறந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள டைனோசர் பூங்காவில் 1989ஆம் ஆண்டு டைனோசரின் புதைபடிம ஒன்று ஆராய்ச்சி செய்யப்பட்டது. அப்போது அந்த டைனோசரின் கால் மோசமான சிதைந்த நிலையில் இருந்து குணம் அடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் தற்போது மற்றொரு உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது அந்த டைனோசர் வீரியம் மிக்க எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்பதே அவர்களின் கருத்தாகும். இதன் மூலம் அந்த காலத்தில் பூமியில் திரிந்த டைனோசர்கள் எவ்வாறு உயிரிழந்தன என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு விடையாக இருக்க க்கூடும். எனவே இது தொடர்பான ஆராய்ச்சியை அறிவியலாளர்கள் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
Comments