ஊரடங்கிற்குப் பிறகு தேசிய அளவில் நடைபெற உள்ள முதல் தேர்வு
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தேசிய அளவிலான முதல் தேர்வாக ஆகஸ்ட் 22ம் தேதி, சட்டப் படிப்புகளுக்கான கிளாட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்விற்காக 77 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், 68 ஆயிரம் பேர் இளங்கலை பட்ட படிப்பிற்கும், 9 ஆயிரம் பேர் முதுகலை பட்டபடிப்பிற்குமான தேர்வை எழுத உள்ளனர்.
ஆன்லைன் மூலம் நடைபெற உள்ள தேர்வுக்கு நாடு முழுவதும் 67 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கொரோனா முன்னெச்சரிக்கையாக, தேர்விற்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கம்ப்யூட்டர்களின் கீ போர்ட்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஊரடங்கிற்குப் பிறகு தேசிய அளவில் நடைபெற உள்ள முதல் தேர்வு #CLAT2020
— Polimer News (@polimernews) August 4, 2020
| #Exams https://t.co/1fFzBiPloh
Comments