விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிகை 110 ஆக உயர்வு

0 1357
பஞ்சாபில் விஷசாராயம் அருந்தியவர்களில் மேலும் 6 பேர் பலியானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் விஷசாராயம் அருந்தியவர்களில் மேலும் 6 பேர் பலியானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக தரன் தாரன் மாவட்டத்தில் 3 பேரும், பட்டாலாவில் 2 பேரும், அமிர்தசரசில் ஒருவரும் நேற்று உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2 தொழிலதிபர்கள் உட்பட மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, விஷசாராய விற்பனையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், லூதியானாவைச் சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் உட்பட 8 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பிக்கள் அம்மாநில ஆளுநரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments