இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியை சீன ரகசிய பிரிவு உளவு பார்ப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவற்றை சீன ராணுவத்தின் ரகசிய சைபர் உளவுப் பிரிவு உளவு பார்ப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீன ராணுவத்தின் ரகசியப் பிரிவு தீவிரப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சீன ராணுவத்துடன் தொடர்புடைய ஹாக்கர்கள் இந்தியா குறித்த முக்கிய தகவல்களை திரட்டுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சீனாவின் சைபர் உளவுப் பணிகளுக்கு 3 ஹாக்கர்கள் உதவுவதாக கூறப்படுகிறது. அண்மையில் இவர்கள் மால்வேர்கள் இணைந்த தனியான கம்ப்யூட்டர் புரோக்ராம்களை அனுப்பி பல அரசு மற்றும் தொழில்நிறுவனங்களை உளவு பார்த்த தாகவும் செய்தி வெளியானது.
சைபர் தாக்குதல் வாயிலாக எதிரி நாடுகளின் மின்சார கிரிட்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றை முடக்கவும் சீன ஹாக்கர்கள் முயற்சிப்பதாக கவலை தரும் செய்தியும் வெளியாகி உள்ளது.
Comments