லண்டனில் படகு போக்குவரத்து சேவைகளை வழங்கும் ”உபேர்” நிறுவனம்

0 1312
இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில், பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை உபேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில், பயணிகளுக்கான படகு போக்குவரத்து சேவையை உபேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

லண்டன் தேம்ஸ் நதியில், சுமார் 24 கிலோமீட்டர் தூரத்துக்குப் படகு சேவைகளை வழங்கி வந்த Thames Clippers நிறுவனத்துடன், தற்போது உபேர் நிறுவனம் இணைந்துள்ளதால், இனி வரும் நாட்களில், பயணிகள் தங்கள் கைபேசியில் உள்ள உபேர் செயலியின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 43 லட்சம் பேர் தேம்ஸ் நதியில் படகு மூலம் பயணித்து வந்த நிலையில், தற்போது கொரோனா தாக்கத்தால் மேலும் பலர் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தவிர்த்து, படகு போக்குவரத்தை தேர்வு செய்வதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments