எல்லையில் ஜூன் 15ஆம் தேதி ஏற்பட்ட மோதல் மீண்டும் நிகழாமல் தடுக்க, ரோந்து நெறிமுறைகள்?

0 2037
கால்வன் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி ஏற்பட்ட மோதல் மீண்டும் நிகழாமல் தடுக்க, ரோந்து நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்துவது குறித்து, இந்தியா-சீனா அரசு தரப்பில் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கால்வன் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி ஏற்பட்ட மோதல் மீண்டும் நிகழாமல் தடுக்க, ரோந்து நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்துவது குறித்து, இந்தியா-சீனா அரசு தரப்பில் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

லடாக் எல்லையில் படை விலக்கம் குறித்து ராணுவ அதிகாரிகள் நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதல் படைகளை திரும்பப் பெறுவதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ வீரர்கள் ரோந்து பணியின்போது இனி மோதல் ஏற்படாமல் தடுப்பதும் முக்கியம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லையில் இருதரப்பும் உள்கட்டுமானங்களை வலுப்படுத்தியுள்ளதோடு, ரோந்து பணிகளும் அதிகரித்திருப்பதால் உரசல் ஏற்படுவதும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் எங்கெங்கு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இரு தரப்பும் பகிர்ந்துகொண்டு, ரோந்து செல்வதற்கான நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மோதலை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments