தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கேள்வி

0 2244

அண்மையில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளை நிர்வகித்த நிறுவன உரிமையாளர்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா,  செயலிகளை பயன்படுத்திய பயனாளர்களின் தரவுகள் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதா என்பன உள்ளிட்ட 80 கேள்விகளை மத்திய அரசு எழுப்பி உள்ளது.

சீன ராணுவம் உள்ளிட்ட அந்த நாட்டு அமைப்புகளுக்கு இந்திய பயனாளர்களின் தரவுகள் வழங்கப்பட்டிருக்குமா என்ற கவலையின் அடிப்படையில், மத்திய அரசு இந்த கேள்விக் கணைகளை தொடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட செயலிகளை நிர்வகித்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் யார், எந்த விதமான சேவைகள் வழங்கப்பட்டது, தனிநபர் பாதுகாப்பு என்ன,தரவுகள் அடிப்படையிலான தகவல்கள் எவை உள்ளிட்ட பிரிவுகளில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

டிக்டாக் போன்ற  செயலிகளை இந்தியாவில் நிறுவப்பட்ட நிறுவனங்கள் கையாண்டிருந்தால், அது குறித்த பல கேள்விகளும் இடம் பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments