பஞ்சாபில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்வு

0 2155
பஞ்சாபில் விஷசாராயம் அருந்தியதில் நேற்று மேலும் 18 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. டர்ன் டரன் மாவட்டத்தில் மட்டும் நேற்று 17 பேர் உயிரிழக்க பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து,  அமிர்தசரஸ் மற்றும் படாலா மாவட்டங்களில் தலா 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை கலால் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 13 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக தெரிவிப்பதன் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவதாகவும், மாநிலத்தில் மொத்தம் எத்தனை பேர்  விஷசாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விவரங்கள் இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments