கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று
கர்நாடக முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று முன்னெச்சரிக்கையாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமீபத்தில் தன்னைச் சந்தித்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எடியூரப்பா தனது குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Karnataka CM BS Yediyurappa's daughter has tested positive for #COVID19. She has been admitted to the hospital: Manipal Hospital, Bengaluru
— ANI (@ANI) August 3, 2020
Comments