புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதியக் கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக 'புதிய கல்விக் கொள்கை குறித்த காணொலி கருத்து மேடை' எனும் நிகழ்ச்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக எம்.பி கனிமொழி, கல்வியாளர்கள் பங்கேற்று கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை முன்வைத்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு, குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாக கொண்டு வருகிறதோ என்ற ஐயம் எழுவதாக தெரிவித்தர்.
மேலும் இதனால் உயர்கல்வி பயில்வது கடினமாகும் சூழல் உருவாகும் என்றும், கல்விக் கட்டணம் உயர வழிவகுக்கும் என்றும் ஆதங்கம் தெரிவித்த ஸ்டாலின், மும்மொழி கொள்கை போன்ற இந்த புதிய கல்விக் கொள்கையை ஆளும் அதிமுக அரசு எதிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Comments