அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. இங்கிலாந்து அணி வெற்றி

0 2121

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை கைப்பற்றியது. சவுதாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 212 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, அயர்லாந்து அணியின் கர்டிஸ் கேம்பர்(curtis campher) 68 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து, விளையாடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தாலும், ஜானி பார்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ் மற்றும் டேவிட் வில்லேவின் பொறுப்பான ஆட்டத்தால், 32 புள்ளி 3 ஒவர்களில் 216 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments