இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் திட்டம்
இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதுப்பித்துள்ள வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் திட்டமிட்டுள்ளது. உத்ரகாண்டில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கி, கடந்த மே மாதத்தில் நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது.
இது அடிப்படை ஆதாரமற்றது, இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு முரணானது என இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, கூகுள் மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என நேபாளம் அறிவித்துள்ளது.
மேலும், வரும் 15-ம் தேதிக்குள், இந்த பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments