நிலவில் சேதமின்றி தரையிறங்கியதா சந்திராயன் -2ன் ரோவர் கருவி
சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ரோவர் கருவி எந்த பாதிப்பும் இன்றி நிலவின் மேற்பரப்பில் அப்படியே இருப்பதாக, சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் இரண்டில் இருந்து லேண்டர் பாகத்தை தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அதன் உடைந்த பாகங்களை சென்னையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் எனும் மென்பொறியாளர் கண்டுபிடித்து தெரிவித்தார்.
இந்நிலையில் இஸ்ரோவிற்கு அவர் அனுப்பியுள்ள புதிய மின்னஞ்சலில், கடந்த மே மாதத்தில் நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை ஆராய்ச்சி செய்த போது, லேண்டரில் இருந்த பிரக்யான் எனும் ரோவர் கருவி சேதமின்றி தரையிறங்கி இருப்பதையும், மேலும் சில மீட்டர் தூரத்திற்கு அது பயணம் செய்து இருப்பதை காண முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அக்கருவியின் பூமிக்கு தகவல் அனுப்பும் திறன் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments