விமான எரிபொருள் விலை 3 சதவீதம் அதிகரிப்பு... விமான டிக்கெட்டுகள் விலை உயர வாய்ப்பு..!
விமான எரிபொருள் விலை 3 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 2 மாதங்களில் ஐந்தாவது முறையாக உயர்த்தப்பட்ட விலையாகும். அதே சமயம் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை விமான எரிபொருள் விலையை திருத்தி அமைக்கின்றன. அதன்படி விமான எரிபொருள் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஒரு கிலோ லிட்டர் 43ஆயிரத்து 932ஆக ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினசரி அடிப்படையில் திருத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலைகளில் நேற்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Comments