மாநிலங்களவை எம்.பி. அமர்சிங் உடல் நலக்குறைவால் மரணம், பிரதமர் மோடி இரங்கல்

0 1492

சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அமர்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமர்சிங், அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அமர்சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments