கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 86ஆக உயர்வு

0 5399

பஞ்சாபில் விஷசாராயம் அருந்தியதில் நேற்று மேலும் 48 பேர் பலியானதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை முதல் இதுவரை டர்ன் டரன் மாவட்டத்தில் 63 பேரும், அமிர்தசரசில் 12 பேரும், படாலாவில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 7 கலால் மற்றும் 6 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அமரிந்தர்சிங் அறிவித்துள்ளார். இதனிடையே, மேலும் எத்தனை பேர் விஷசாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் இல்லை என அரசு தெரிவித்து இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments