நாசா வீரர்கள் ஸ்பேக்ஸ் நிறுவன விண்வெளி ஓடத்தில் மீண்டும் பூமி திரும்புகின்றனர்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் இருவர், ஸ்பேக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பாப் பென்கன் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் கடந்த மே மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக, உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தயாரிப்பான Crew Dragon விண்வெளி ஓடத்தை அடைவார்கள் எனவும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.48 மணியளவில் மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள 7 இடங்களில் ஏதேனும் ஒன்றில் பூமியை வந்தடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments