ரெம்டெசிவிர் ஊசி மருந்தை கள்ள சந்தையில் விற்க முயற்சி என புகார்

0 2518
கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் REMDESIVIR ஊசி மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சைக்கு அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களுக்கு மட்டுமே REMDESIVIR ஊசி மருந்து செலுத்த வேண்டும் என   நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதனை மீறும் வகையில், REMDESIVIR ஊசி மருந்தை சப்ளை செய்ய தயாராக இருப்பதாக ஒரு கும்பல், மதுரையில் 5 மருந்தகங்களின் உரிமையாளர்களிடம் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ தகவல் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழக சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், மதுரையில் இந்த சம்பவம் அரங்கேறியது உறுதி செய்யப்பட்டதால், 5 மருந்தகங்களுக்கும் விளக்கம் கேட்டு, மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments