கோவிசீல்டு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்க சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அரசு அனுமதி
கோவிசீல்டு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டச் சோதனைகளை நடத்தப் புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனேகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவைக் குணப்படுத்துவதற்காக கோவிசீல்டு என்னும் மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் கோவிசீல்டு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டச் சோதனை செய்வதற்கு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த வல்லுநர் குழு, சோதனைக்கு அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.
கோவிசீல்டு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்க சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அரசு அனுமதி #COVID19Vaccine | #SerumInstitute https://t.co/J0Ez0iHkFE
— Polimer News (@polimernews) August 1, 2020
Comments