100 பேரை கொலை செய்து முதலைகளுக்கு வீசிய டெல்லி மருத்துவர்

0 6133
டெல்லியில் கைதான 62 வயது ஆயுர்வேத மருத்துவர், 100 பேரை கொலை செய்து முதலைகளுக்கு வீசியவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. ஆயுர்வேத மருத்துவரான தேவேந்தர் சர்மா, ராஜஸ்தானில் 1984இல் மருத்துவமனை ஆரம்பித்து நடத்தினார்.

பின்னர் அதிகம் சம்பாதிக்க ஆசைபட்டு ஆரம்பித்த கியாஸ் சிலிண்டர் தொழிலில் ஏமாற்றப்பட்டதால், போலி ஏஜென்சி நடத்தி, அதற்காக சிலிண்டர் லாரிகளை கடத்தி, டிரைவர்களை கொன்று உத்தர பிரதேச கால்வாய்களில் முதலைகளுக்கு வீசியுள்ளார்.

இவ்வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வெளி வந்த அவர், பிறகு டாக்சி டிரைவர்களை கடத்தி கொலை செய்ததோடு, கிட்னி திருட்டு கும்பலுடன் சேர்ந்து  கிட்னி திருட்டு, கொலையில் ஈடுபட்டுள்ளார்.

முதல் மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்றுவிட 16 ஆண்டுகள் சிறை தண்டனையில் பரோலில்  வந்த அவர், 2ஆவது திருமணம் செய்தநிலையில் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட திட்டமிடுவதாக கிடைத்த தகவலால் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments