புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழிப் பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம்

0 3838

புதிய கல்விக் கொள்கையில் விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளது. இதில் விருப்பத் தேர்வாக இந்திய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதே போல், வெளிநாட்டு மொழிகளான கொரியன், ஜப்பான், தாய், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், ரஷ்யன் மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கை வரைவில், வெளிநாட்டு மொழிகள் பிரிவில் இருந்த சீன மொழியான மாண்டரின் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலால் நூற்றுக்கு மேற்பட்ட சீனச் செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில், இப்போது விருப்ப மொழிக்கான பட்டியலில் இருந்து சீனாவின் மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments