அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடக்கம்

0 3749

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் 54 பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை மாதம் நடைபெற்றது.

இதில் மொத்தம் உள்ள 92,000 இடங்களுக்கு 3,12,883 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 2,25,819 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் மாநில உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

அக்கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை www.tngasa.in இணையதளத்தில் இன்று முதல் பதிவேற்றும் பணி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சான்றிதழ்களை வரும் 10-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments