சியாச்சினைப்போல் லடாக்கிலும் வசதிகளைச் செய்ய ராணுவம் முடிவு
லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுக்கு சியாச்சினில் உள்ளதைப் போல் குளிரைத் தாங்குவதற்கான வசதிகளைச் செய்துகொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில் கால்வன் ஆற்றின் கரையில் இருந்த முகாம்களை அகற்றிவிட்டு 2 கிலோமீட்டர் தொலைவுக்குச் சீன ராணுவத்தினர் பின்வாங்கினர்.
தற்காலிகமாகப் பின்வாங்கினாலும் தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளதால் லடாக்கில் கண்காணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சியாச்சினில் படைவீரர்களுக்குச் செய்துள்ள வசதிகளைப் போல் லடாக்கிலும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகக் குளிரைத் தாங்கும் வகையிலான உடைகள், பனிக்கூடாரம் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பேச்சு நடத்த அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Comments