நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 57,117 பேர் பாதிப்பு

0 2008
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 57 ஆயிரத்து 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 764 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 511ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 5 லட்சத்து 65 ஆயிரத்து 103 பேர் மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில், 10 லட்சத்து 94 ஆயிரத்து 374 பேர் குணமாகி உள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் இதுவரை 14 ஆயிரத்து 994 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments