இந்தியாவில் 2ஜி செல்போன் சேவையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - முகேஷ் அம்பானி
நாட்டில் 2 ஜி செல்போன் சேவையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ரிலையன்ஸ் நிறுவன அதிபரும் 4ஜியை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஜியோ செல்போன் நிறுவன உரிமையாளருமான முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கப்பட்டு 25ம் ஆண்டு (silver jubilee) ஆவதையொட்டி தனது வாழ்த்துகளை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கும், செல்போன் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள முகேஷ் அம்பானி, இந்தியாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் 5ஜி சேவை தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்படிபட்ட சூழ்நிலையில் நமது நாட்டில் சுமார் 30 கோடி பேர் 2ஜி சேவையை மட்டும் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் அவர்களுக்கு அடிப்படை இணைய சேவையை கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Comments