ஆளுக்கொரு வாழைப்பழம்…. கால்வாயில் குதித்த அமைச்சர்..! மக்களை வியக்கவைத்த காட்சிகள்

0 3241

ஈரோடு மாவட்டம் பவானி அருகே கால்வாய் அடைப்பை சரி செய்ய கோரிக்கை வைத்த மக்கள் முன்னிலையில், வறண்ட கால்வாயில் குதித்து அமைச்சர் ஆய்வு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கூட்டத்தைக் கலைக்க ஆளுக்கொரு வாழைப்பழம் வழங்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கேசரிமங்கலம், சித்தார், கல்பாவி, மாணிக்கம் பாளையம், குட்டை முனியப்பன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

குட்டை முனியப்பன் கோவிலில் இருந்து கூத்தம்பட்டி செல்லும் சாலையில் கிராம மக்கள் அமைச்சரின் காரை மறித்த பொதுமக்கள், அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் விவசாய நிலங்களிலும், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்

இதையடுத்து அமைச்சர் கருப்பணன் யாரும் எதிர்பாராத நிலையில் வறண்டு காணப்பட்ட கால்வாயில் திடீரென குதித்திறங்கி, கழிவு நீர் செல்லும் பாதைக்குள் தலையை குனிந்து உற்று நோக்கினார்

இதையடுத்து ஒருவாரத்தில் இப்பிரச்சனையை சரி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் தார்ச் சாலை அமைத்தல் கழிவுநீர் சாக்கடை கால்வாய் அமைத்தல், மேல்நிலை குடிநீர் தொட்டி, காங்கிரீட் சாலை உள்ளிட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜையில் அமைச்சர் கருப்பண்ணன் பங்கேற்றார்.

அங்கிருந்த மக்களுக்கு ஆளுக்கொரு வாழைப்பழமும், சிறுவர்களுக்கு ஆளுக்கு இரண்டு சாக்லெட்டும் கொடுத்து அனுப்பிவைத்தார் அமைச்சர் கருப்பணன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments